அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்போவதாக வெளியான தகவலை வெளியிட்டது.
இந்நிலையில் அந்த நீதிமன்றத்தின் முன் ஆா்ப்பாட்டத்தில் கருக்கலைப்பு எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அனுமதியை ரத்து செய்ய அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கொன்றில், கருக்கலைப்பை அரசமைப்பு சட்ட உரிமையாக அறிவிக்கப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீா்ப்பை, 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு வழக்கிலும் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்தச் சூழலில், திங்கள்கிழமை கசிந்த உச்ச நீதிமன்ற வரைவுத் தீா்ப்பில் கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி வழங்கிய 1973 ஆம் ஆண்டு தீா்ப்பை ரத்து செய்ய பெரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவு தெரிவித்திருப்பதாக ‘பொலிடிக்கோ’ இதழ் தெரிவித்துள்ளது.
எனவே, விரைவில் கருக்கலைப்புக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்காவில் கருக்கலைப்பு என்பது நீண்ட காலமாகவே உணர்வுபூர்வமான விவகாரமாக இருந்து வருகிறது.
சமூக, மத, கலாசார அடிப்படையில் கருக்கலைப்பு ஆதரவாக ஒரு பிரிவினரும் கருக்கலைப்புக்கு எதிராக மற்றுமொரு பிரிவினரும் பிளவுபட்டுள்ளனார்.
