அமெரிக்காவில் கணவனால் துன்புறுத்தப்பட்ட இந்திய பெண்ணின் விபரீத முடிவு

0

இந்திய சீக்கிய 30 வயதான பெண்ணான மன்தீப் கவுர் ஆகஸ்ட் 4 அன்று நியூயார்க்கில் தற்கொலை செய்து கொண்டார்.

ஆறு மற்றும் நான்கு வயதில் இரண்டு மகள்களுக்கு தாயான மன்தீப் கவுர் இறப்பதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆண் குழந்தையை பெற்று தராததால் கணவனால் துன்புறுத்தப்பட்டதாக இறப்பதற்கு முன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.

அமெரிக்காவில் இந்திய பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது கணவர் குறித்த பெண்ணின் உடலை ரகசியமாக தகனம் செய்துவிட்டதாக இந்தியாவில் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வீடியோக்களில் விவரித்த பின்னர் நியூயார்க்கில் இந்தியப் பெண் மந்தீப் கவுர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தியப் பெண் மந்தீப் கவுரின் குடும்பத்தினர், உடலைக் கோர முயன்றபோதும் கணவர் அவரை தகனம் செய்ததாகக் கூறியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் பிஜ்னூரில் உள்ள கிராமத்தில் இருந்து பேசிய அவரது சகோதரர் சந்தீப் சிங், இந்திய அரசின் நடவடிக்கைகளில் குடும்பத்தினர் திருப்தி அடையவில்லை.

“அங்கு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் அதை எப்படிச் செய்ய அனுமதிக்க முடியும்,” என்று அவர் கேட்டார்.

மேலும், பஞ்சாபி மொழி பேசும் அமெரிக்காவைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் ரஞ்சோத்பீர் சிங் சந்து (கணவர்) மீது வழக்குத் தொடர உதவி கோரினார்.

தனது கணவனின் பல ஆண்டுகால துன்புறுத்தலை தாங்கிக்கொள்ளமுடியாமல் குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here