அமெரிக்காவில் இளம்பெண்ணை கடித்து குதறிய கரடிகள்!

0

அமெரிக்காவில் கொலராடோ பகுதியில் Durango என்ற நகரில் பெண் ஒருவர் தனது இரண்டு நாய்களுடன் வாக்கிங் சென்றுள்ளார்.

அதன்பின் அவருடைய காதலன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கே இரண்டு நாய்கள் மட்டும் இருந்த நிலையில் அவருடைய காதலியை காணவில்லை.

இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துடன் தானும் காதலியை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்பு அந்தப் பெண்ணின் உடலானது மரங்கள் அடர்ந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் அப்பகுதியில் ஆராய்ந்தபோது அங்கு கரடிகளின் எச்சங்கள் இருப்பதை அவதானித்துள்ளனர்.

மேலும் மோப்ப நாய்களின் உதவியுடன் அவர்கள் சோதனையில் ஈடுபட்ட போது ஒரு தாய் கரடியும் இரண்டு குட்டி கரடிகளும் நின்று கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுள்ளனர்.

உடனடியாக அந்த மூன்று கரடிகளையும் ஊசி மூலம் மருந்து செலுத்தி கொன்றுள்ளனர்.

அதன்பின் அந்த மூன்று கரடிகளுக்கும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு செய்யப்பட்டபோது அந்தப் பெண்ணின் உடல் பாகங்கள் அந்த மூன்று கரடிகளின் வயிறுக்குள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் பொதுவாக கரடிகள் மனிதர்களை கொன்று தின்ன கூடியது அல்ல என கூறப்படுகின்றது.

இந்நிலையில் மனிதர்களைக் கண்டு பயப்படக் கூடாது என அது தனது குட்டிகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் தாம் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை உணர்த்தவும் தாய்க்கரடி தனது குட்டிக்கரடிகள் கண்முன்னே அந்த பெண்ணை கொன்று தின்றுள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here