அமெரிக்காவில் அதி உச்ச வெப்பநிலை…!பரிதாபமாக பலியாகும் மக்கள்…!

0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் Death Valley தேசிய பூங்கா பகுதியில் 130F வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இது கடந்த 90 ஆண்டுகளில் பூமியில் பதிவான அதி உச்ச வெப்பநிலை என கூறப்படுகிறது.

கடந்த 1913ல் இதே பகுதியில் 134F வெப்பநிலை பதிவானதே உலக வரலாற்று சாதனையாக உள்ளது.

மேலும், மேற்கு கடற்கரையில் வெப்பநிலை வார இறுதியில் 117 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 1 ஆம் திகதி வரையில் வெப்ப அலை காரணமாக ஒரேகான் பகுதியில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாஷிங்டனில் மரண எண்ணிக்கை 78 என பதிவாகியுள்ளது.

இப்பகுதிகளில் 98 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க கலிபோர்னியாவின் பெரும்பகுதி காட்டுத்தீயால் சேதமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிலவரப்படி 38 சதுர மைல்களுக்கு மேல் தீ பரவியது என தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here