அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் படகுகள் போர்ட்டோ ரிக்கோ பகுதியில் தண்ணீரில் கவிழ்ந்தது.
அதனை தொடர்ந்து அதில் 11 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கடலோர காவல்படை செய்தி தொடர்பாளர் ரிக்கார்டோ காஸ்ட்ரோடாட்,அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேற முயன்றவரிகளின் படகுகளில் எத்தனை நபர்கள் இருந்தார்கள் என்ற முழுவிவரம் தெளிவாக தெரியவில்லை.
ஆனால் முடிந்தவரை உயிர்பிழைத்தவர்களை மீட்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற நபர்களில் 8 நபர்கள் ஹைட்டியர்கள் என்றும் பிற நபர்கள் குறித்து தகவல் தெளிவான தகவல் தெரியவில்லை எனவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த சிலமாதங்களாக படகுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதில் பெரும்பாலானோர் ஹைட்டியர்கள், கியூபர்கள் மற்றும் டொமினிகன்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.