அமெரிக்காவின் Monkeypox…. ! எச்சரிக்கும் மருத்துவர்கள்…

0

அமெரிக்காவின் 27 மாகாணங்களில் குரங்கு பி என அறிவிக்கப்பட்டுள்ள monkeypox என்ற புதிய வைரஸை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியை சேர்ந்த நபரில் இருந்து இந்த புதிய தொற்று பரவியிருக்கலாம் சந்தேகம் எழுந்துள்ளது.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து திரும்பிய பெயர் வெளியிடப்படாத அந்த நபர் டெக்சாஸ் செல்லும் வழியில் ஜூலை 8 மற்றும் 9ம் திகதிகளில் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் தங்கியிருந்துள்ளார்.

இதற்கும் ஒரு வாரம் முன்னரே நைஜீரியாவில் இருக்கும் போது monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

monkeypox தொற்றானது தும்மல் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் திரவங்களால் பரவுகிறது.

monkeypox தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், monkeypox தொற்றால் உயிர் அபாயம் குறைவு என்றாலும், கொரோனா போன்றும் இதுவும் தீவிரமான தொற்றாகவே கண்காணிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 6 monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் நைஜீரியா சென்று திரும்பியவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

monkeypox தொற்றானது முதன் முதலில் 1958ல் கண்டறியப்பட்டது. 1970ல் தான் மனிதரில் முதல் முறையாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

monkeypox தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here