உக்ரைன் எல்லைகளில் ரஷ்யாவின் படைகள் மற்றும் பீரங்கி பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனால் அங்கு எந்த நேரத்திலும் போர் இடம்பெறும் அபாயம் உள்ளது.
மேலும் குறித்த போர் நடைபெறுவதை தடுப்பதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
உக்ரைனில் எஞ்சியுள்ள அமெரிக்கர்கள் இப்போது வெளியேற வேண்டும் என ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு நடந்தால், அமெரிக்கர்களை மீட்க அமெரிக்கா படைகளை அனுப்பினால், அது உலகப் போராக முடியும் என ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.