ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மூன்று எரிபொருள் தாங்கிய பாரவூர்திகள் வெடித்து தீப்பற்றியுள்ளது.
அதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரு இந்தியர்களும், பாகிஸ்தானியர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆளில்லா விமான கருவி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு யேமனின் ஈரான் தலைமையில் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.