அபாரமாக வெற்றி பெற்ற இலங்கை அணி!

0

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

129 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியினூடாக இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here