அபாய கட்டத்தில் இலங்கை – திணறும் வைத்தியசாலைகள்

0

கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக இலங்கை அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களினால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நூற்றுக்கு 30 வீதமானோர் இதுவரையில் ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக சுகாதார தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அவ்வாறான நிலைமைக்குள் நேற்றைய தினம் வரையில் இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் முழுமையாக நிரம்பியுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிசசை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த முடியாமல் போனால் பாரிய ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடு முழுவதும் உள்ள பிரதான வைத்தியசாலைகள் திறனை மீறி சென்றுள்ளது. நேற்று வரையில் சில வைத்தியசாலைகளில் தொற்றாளர்களுக்கு கட்டில்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. சில நோயாளிகள் வைத்தியசாலைகளின் அறைகளில் கீழே படுத்திருப்பதுடன் சிலர் வாசற்படியில் படுத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் வைத்தியசாலை நோயாளிகள் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஒக்ஸிஜன் தேவை அதிகரிப்பதனால் எதிர்வரும் நாட்களில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட கூடும் என சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தள்ளார்.

வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கட்டில்கள் அனைத்து முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here