அனைத்து வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும் புதிய ஸ்பிரே….!

0

Omicron வைரஸ் , பீட்டா வைரஸ், டெல்டா வைரஸ் என அனைத்து வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும் புதிய ஸ்பிரே வகையை பின்லாந்து அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது எட்டு மணி நேரம் வரை கொரோனாவைத் தடுக்கும் திறன் கொண்டது.

பின்லாந்திலுள்ள Helsinki பல்கலை அறிவியலாளர்கள் இந்த ஸ்பிரேயைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

கொரோனா வைரஸைப் பொருத்தவரை, அது இனப்பெருக்கம் செய்யும் இடம், அதாவது அது பெருகும் இடம், மூக்கு ஆகும்.

இந்நிலையில் மூக்கில் பெருகி, எண்ணிக்கையில் அதிகரித்து, பின்னர் அது நுரையீரல் வரை பயணித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சையில் இருப்போர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், HIV தொற்றியவர்கள் முதலான நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு கொண்டவர்களுக்கு இந்த ஸ்பிரே பெரும் வரப்பிரசாதமாக அமைய வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், தடுப்பூசியை எப்படியாவது தடுக்க விரும்புவோர் இந்த ஸ்பிரேயை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

ஏனெனில் தடுப்பூசியுடன் இணைந்து செயல்படும் ஒரு கூடுதல் பாதுகாப்பு முறைதான் என்கிறார்கள் அதைக் கண்டுபிடித்த அறிவியலாளர்கள்.

இந்த ஸ்பிரே தற்போது ஆய்வகத்தில் விலங்குகள் மீது மட்டும்தான் சோதிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் மீது இன்னமும் சோதிக்கப்படவில்லை என்பதால் உலக பாவணைக்கு வருவதில் சற்று தாமதம் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here