கொரோனா தொற்று பல நாடுகளில் உருமாற்றம் அடைந்து காணப்படுகின்றது.
இந்நிலையில் Pfizer தடுப்பூசி, மிகவும் தீவிரமாக பரவக்கூடிய பிரேசிலிய P.1 மாறுபாட்டை தடுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Pfizer/BioNTech தடுப்பூசி பெற்றவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தம், P.1 போன்ற உருமாறிய வைரஸிக்கு எதிராக பயனுள்ளதாக இருந்தது என்று New England Journal of Medicine-ல் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலிய மாறுபாட்டிற்கு எதிராகவும் தடுப்பூசியின் செயல்திறன், கிட்டதட்ட 2020-ல் தோன்றிய குறைந்த வீரியம் கொண்ட தொற்றுக்கு எதிராக செயல்பட்டது போல் தான் இருந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Pfizer முன்னர் அதன் தடுப்பூசி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிற தொற்று வகைகளையும் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளது.