அனுராதபுரம் பாடசாலைகளில் கொரோனா கொத்தணி

0

அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை, அனுராதபுரம் மாவட்ட தொற்று நோயியல் விஷேட வைத்திய ஆர்.எம்.எஸ்.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அனுராதபுரம் பாடசாலையில் ஏற்பட்ட இந்த நிலையானது, எதிர்காலத்தில் மேலும் வளச்சியடையலாம்.

அனுராதபுரம் நகர சபை, கலென்பிதுனுவெவ, பதவிய, தலாவ மற்றும் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்றுக்கு உள்ளான, பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here