அனுராதபுரம் சிறையில் CCTV கமராவுக்கு நடந்தது என்ன?

0

வெலிக்கடை மற்றும் அனுராதபுர சிறைச்சாலைகளில் CCTV கமராக்கள் பொறுத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

தற்போது அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலைகளில் மட்டுமே CCTV கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த விடயத்தை சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சிறைச்சாலைகளுக்கு வருகைத்தரும் அனைவரும் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடவேண்டியது அவசியம் என்பதால், தேவையெனில் விசாரணைகளுக்காக அந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ளுமாறும் சிறைச்சாலை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here