அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் !!

0

அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர்.

அப்போது பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள்.

துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.

துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மகட்பேறு முதலியன பெருகும். துளசி கட்டை மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள். இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here