‘அந்தகன்’ படத்தில் இணைந்த மற்றுமொரு ஹீரோயின்

0

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

நடிகைகள் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் மற்றுமொரு நடிகை இணைந்துள்ளார். தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியா ஆனந்த், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தியில் ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here