அதி சொகுசு பேருந்து புகையிரதத்தில் மோதி விபத்து…

0

களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் மருத்துவ பணியாளர்களை ஏற்றிச் சென்ற அதி சொகுசு பேருந்தொன்று புகையிரதத்தில் மோதி விபத்திற்குள்ளாகியது.

களுத்துறை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நோக்கில் இந்த மருத்துவ பணியாளர்கள் குறித்த பேருந்தில் பயணித்துள்ளனர்.

புகையிரத கடவையில் வைத்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்தில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 12 பேர் பயணித்துள்ளனர் அதில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here