அதிவேக வீதியில் நூற்றுக்கணக்கான வாகனங்களை திருப்பி அனுப்பிய பொலிஸார்

0

பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், அதிவேக வீதியில் உரிய அனுமதியின்றி பயணித்த 120 வாகனங்களை பொலிஸார் நேற்று (16) திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து தென் மாகாணத்திற்கு பயணித்த வாகனங்கள், வெலிபென்ன நுழைவாயிலில் சோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே, பொலிஸார் உரிய அனுமதியின்றி பயணித்த வாகனங்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

கொவிட் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை தினங்களை கருத்திற்கொண்டு, மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு கடுமையான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் தினங்களிலும் மாகாண எல்லைகளில் இவ்வாறு பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here