அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த இளைஞர்கள்…

0

இலங்கையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்தில் இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

குறித்த இளைஞர்களை இன்று அதிகவேக நெடுஞ்சாலையின் சுற்றுலா காவல்துறை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவில் குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு கண்டி காவல்துறையினர் ஊடாக அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள் சிலர் நீல நிற மகிழுந்து ஒன்றின் கதவுகளில் அமர்ந்தவாறு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

இந்த மகிழுந்து கொழும்பில் இருந்து காலி நோக்கி தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் பயணித்தமை தெரியவந்துள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் பயணித்த மகிழுந்து தொடர்பில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து இவ்வாறு பயணித்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அவர் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here