பாராளுமன்ற சபை அமர்வுகள் கூடுவதற்கு முன்பதாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி, புதுமுகங்களுக்கும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக, அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்களும் தொடர்ந்து அரசின் சில செயற்பாடுகளை நேரடியாக விமர்சித்து வருகின்ற நிலையில், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், விவசாயத்துறை அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, வலுசக்தி அமைச்சு, மின்சக்தி அமைச்சு மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட சில முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை முன்னெடுக்கலாம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.