அதிரடியாக செயற்படும் பிரித்தானிய பிரதமர்..!

0

பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் தனது முதல் பணியாக சீனி வரியை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் வாழ்க்கை செலவு நெருக்கடியை தணிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிடவும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல் பருமன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங், சுகாதார அதிகாரிகளுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு சென்றுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் குளிர்பானங்கள் மீதான சீனி வரி அமலுக்கு வந்தது.

இந்த வரி மில்லியன் கணக்கான குழந்தைகளின் உடல் பருமனை சமாளிக்க உதவுவதை நோக்கமாக கொண்டதாக கூறப்பட்டது.

குளிர்பான உற்பத்தியாளர்கள் தாங்கள் விற்கும் குளிர்பானத்தில் சீனி அதிகம் சேர்த்தால் அந்த பானங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற முறை அமுல்படுத்தப்பட்டது.

சீனி வரி என்பது 100 மில்லிக்கு 8 கிராம் சர்க்கரைக்கு மேல் உள்ள பானங்கள் லிட்டருக்கு 24 சதம் வரி செலுத்த வேண்டும்.

100 மில்லிக்கு 5 கிராம் – 8 கிராம் சீனி இருந்தால் லிட்டருக்கு 18 சதம் வரி செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் சீனி சேர்க்கப்படாத தூய பழச்சாறுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

அதேபோல் பால் மற்றும் கால்சியம் கலந்த பானங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வரிவிதிப்பு காரணமாக Fanta, Ribena மற்றும் Lucozade போன்ற முன்னணி நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பானங்களின் சீனி அளவை குறைக்க தொடங்கியது.

குளிர்பானங்களில் சீனி குறைந்ததால் உடல் பருமன், புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், ​​மூட்டுவலி மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here