அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பு!

0

இலங்கையில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு நிவர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகள் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena ) தெரிவித்துள்ளார்.

இதன்படி, 247000 ஆசிரியர்களுக்கும், 16000 அதிபர்களுக்கும் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பளங்கள் வழங்கப்படும்.

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்து திருத்தி அமைக்கப்பட்ட சம்பளங்களை வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட சம்பளங்களை வழங்குதவற்கான அனைத்து நடவடிக்கைகளும் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டு குறித்த சுற்று நிருபம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here