அதிக நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் விளைவு… உலக சுகாதார அமைப்பு

0

நீண்ட நேரம் வேலை செய்வது உயிரை பறிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்பு, மரணங்கள் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2000-2016 காலகட்டத்தில் உள்ள தரவுகளை வைத்து சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO)இணைந்து ஆய்வொன்றை நடத்தியது.

இதில், நீண்ட நேரம் வேலை பார்த்த ஊழியர்களில் பக்கவாதம் மற்றும் இதய நோய் என்பன ஏற்பட்டு அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

முதல் முறையாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தொடர்பில், சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் நீண்ட நேரம் வேலை செய்தவர்களில் பக்கவாதம் மற்றும் இதய நோயால் 745,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 2000 ஆமாம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பை விட 30 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் (72%) ஆண்கள் மற்றும் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here