அதிகுளிரூட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனின் உடல்….!

0

அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உடலொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன்போது குறித்த வீட்டின் அதிகுளிரூட்டியிலிருந்து (Freezer) 4 வயது சிறுவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

4 வயதான எலைல் எடன் (Eliel Adon) என்ற குறித்த சிறுவனின் சடலம், இரண்டு வருடங்களுக்கு மேலாக அதி குளிரூட்டியில் வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதனால் குறித்த சிறுவனின் பெற்றோர்களான கெஸ்கின் வீவர் (Kassceen Weaver) மற்றும் டீனா டி வீவர் (Dina D. Weaver) ஆகியோர் சடலமொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டடுள்ளனர்.

சிறுவனின் மரணத்துக்கு காரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here