அதிகரிக்கும் தொற்றாளர்கள்! முடக்கப்படுமா யாழின் ஒரு பகுதி?

0

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 103(அரசடி) கிராம அலுவலர் பிரிவில் ஒரு பகுதியினை முடக்குவதற்கு யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மாகாண சுகாதார பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக 22 பேர் குறித்த பகுதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் காரணமாக முடக்குவதற்கு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மாகாண சுகாதார பணிப்பாளர் அரச அதிபர் ,யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசடிப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் சுகாதார நடைமுறைகளை மீறி தேர் உற்சவம் இடம்பெற்ற பின்னர் அந்தப் பகுதியில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here