அண்ணனை கொடூரமாக அடித்து கொன்ற தம்பி! சொன்ன காரணம் ….?

0

இந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள முளையன் காவு பகுதியைச் சேர்ந்தவர் சர்வர் பாபு(24).

தனது தம்பி சக்கீர் (18) மற்றும் சர்வர் இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது சர்வர் செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனால் சக்கீரின் தூக்கம் பாதித்துள்ளது.

அதனால் அண்ணனிடம் சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறியுள்ளார்.

ஆனாலும், பாபு தொடர்ந்து சத்தமாக பாட்டு கேட்டுள்ளார்.

இது சாக்கீருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழுந்து வந்த அவர், மரக்கட்டை ஒன்றை எடுத்து சொந்த அண்ணனின் தலையில் பலமுறை ஓங்கி அடித்துள்ளார்.

படுகாயமடைந்த பாபு இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மயக்கமானார்.

உடனே அதிர்ச்சியடைந்த தம்பி சக்கீர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

சர்வர் பாபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், தப்பியோடிய சக்கீரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து கேட்டறிந்த பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here