அணு ஆயுத வலுக்கொண்ட நாடாக மாறும் வடகொரியா

0

வடகொரியா தன்னை அணு ஆயுத வலுக்கொண்ட நாடாக வெளிப்படுத்தும் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த சட்டம் மாற்ற முடியாத தன்மையை கொண்டது என வடகொரிய தலைவர் வட கொரிய தலைவர் கிம் ஜொன் உன் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சு வார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

தமது நாடு அணு ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டால், அதற்கு முன்னர் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு நாட்டிற்கு உரிமை உள்ளது என்பதனை இந்த சட்டம் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியினில், 6 அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா பூர்த்தி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலப்பகுதியினில் அமெரிக்க நிலப்பரப்பினை தாக்கக்கூடிய அணு வலுவினை வடகொரியா கொண்டிருந்ததை அதன் தலைவர் கிம் ஜாங் உன் வெளிப்படுத்தியிருந்தார்.

இது தவிர, சர்வதேச சட்டங்களை வடகொரியா மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்த போதிலும் அவர் அதனை உதாசீனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here