அட்சய திருதி இன்று அனைவருக்கும் தானம் செய்யுங்கள்

0

அள்ள அள்ளக் குறையாதது என்பது தான் அட்சயம்.

திருதியை அன்று எந்த நல்ல விஷயம் செய்தாலும் அது பல மடங்காகப் பெருகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அட்சய திருதியை அன்று அவசியமாக தங்கம் வாங்க வேண்டும், பொன்னும் பொருளும் அதிகமாக சேரும் என்ற பழக்கம் உருவாகியுள்ளது.

தங்கம் வாங்குவதற்கு அட்சய திருதியை மிகச் சிறந்த நாள்.

அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்காகவே இந்தியாவில் பல குடும்பங்கள் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்ற பழக்கம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் தங்கம் வாங்கினால் மட்டும் தான் ஐஸ்வர்யம் பெருகும் என்பது அல்ல.

அட்சய திருதியை என்று எந்த நல்ல விஷயங்களை செய்தாலும்,அதாவது நமக்கான பொருளை வாங்குவதை விட மற்றவர்களுக்கு உதவி செய்வது, தானம் செய்வது ஆகியவை பல மடங்கு நன்மைகளை அளிக்கும்.

அட்சய திருதியை புராணக் கதைகளும் எந்த பிரதிபலனும் எதிர்பாராத உதவி செய்திருப்பதை சுற்றியே அமைந்திருக்கும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதை விட நீங்கள் தானம் செய்வது சிறந்தது.

திருப்தி என்பது சாப்பிடும் போது மட்டுமே ஏற்படும்.

வறுமையில் வாடும் பலருக்கும் ஒரு வேளை உணவு கூட கனவாக இருக்கிறது.

வசதியற்றவர்களுக்கு, யாசகர்களுக்கு உங்களால் இயன்ற அளவு அன்னதானம் வழங்கலாம்.

வீட்டில் உணவு தயாரித்து கொடுக்கலாம் அல்லது சமைக்கும் பொருட்களாக கொடுக்கலாம்.

அட்சய திருதியை என்று வயிறு நிறைய சுவையான உணவை அளிக்கும் போது, நவகிரகங்களின் ஆசி கிடைக்கும். உங்கள் வீட்டில் என்றென்றும் செல்வம் நிலைத்திருக்க உதவும்.

குங்குமம் மற்றும் சந்தனம்

மங்கலப் பொருளான குங்குமம் மற்றும் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை அட்சய திரிதியை அன்று தானம் செய்வது,சுபிட்சத்தை ஏற்படுத்தும்.

கோவிலில் அல்லது பெண்களுக்கு வெற்றிலை பாக்கில் குங்குமம் மற்றும் சந்தானம் வழங்கலாம்.

குங்குமம் வழங்குவது சுக்கிரனின் அம்சம் என்பதால்,வீட்டில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். சந்தனம் குளிர வைக்கும் தன்மைக் கொண்டதால்,மன நிம்மதி மற்றும் மன அமைதி உண்டாகும்.

இதனால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். குங்குமம் மற்றும் சந்தனத்தை வழங்குவது ஜோதிட ரீதியாக ராகு மற்றும் கேது கிரகங்களின் தாக்கத்தையும் குறைக்கும்.

வஸ்திர தானம் என்று கூறப்படும் ஆடைகள் வாங்கி தரலாம்

பொதுவாகவே,சில விசேஷங்களுக்கு உறவுப் பெண்கள்,அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்கள்,பெண் குழந்தைகள் ஆகியவர்களுக்கு இயன்ற வகையில் ஆடைகளை வழங்கி ஆசீர்வாதம் பெறுவது வழக்கம்.

அதை அட்சய திருதியை அன்று செய்யலாம்.

அட்சய திருதியை அன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ,அது பல மடங்காக கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

அடுத்தவர் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தானமாக வழங்கலாம். எனவே, நீங்கள் செய்யும் சிறிய உதவி கூட உங்களுக்கு பல மடங்கு பலன் தரக்கூடியது என்பதை மறக்க வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here