அடுத்த கட்டத்திற்கு செல்லும் கோப்ரா

0

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வந்த சமயத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியது. இதன் பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுடைந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here