இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்?

0

நவம்பர் 03 ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் 48 மணிநேர மின் வெட்டு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு, பணிப்புறக்கணிப்பு ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த போராட்டத்தை இணைந்து முன்னெடுப்பதற்கு 11 கட்சி தலைவர்கள் வாக்குறுதியளித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here