அடிக்கடி வீட்டில் தங்காத மனைவியால் அதிர்ச்சிக்குள்ளான கணவன்…!

0

பிரித்தானியாவில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், அடிக்கடி வீட்டுக்கு வராமல் வெளியே தங்கியால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிருந்தா கந்தமேனனும் (42), ரவி கந்தமேனனும் முதலில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.

அங்கு சிறப்பாக இந்திய முறையில் திருமணமும் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்கள்.

லண்டனுக்கு குடிபெயர்ந்த பின் பிருந்தாவின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட நாட்கள் வீட்டுக்கு வராமல் வெளியே தங்கத் ஆரம்பமாகிய மனைவியிடம் காரணம் கேட்டால், ஒன்று கணவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பாராம், அல்லது ஏதவாது கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவாராம் பிருந்தா.

பிருந்தா, கணவர் ரவிக்குத் தெரியாமல், தங்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் வாழும் மேத்யூ ஹால் (Matthew Hall, 45) என்பவரை திருமணமும் செய்துகொண்டு, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

இத்தகவலை அறிந்த கணவர் பொலிசில் புகார் செய்ய, பிருந்தா உண்மையை ஒப்புக்கொள்ளார்.

மேலும் விசாரணையில் திருமணச் சான்றிதழில் தனது தந்தையின் பெயருக்கு பதில் வேறொரு பெயரை பொய்யாக எழுதியதாக ஒப்புக்கொண்டார்.

முதல் திருமணத்தை மறைத்து மோசடி செய்து இன்னொரு திருமணம் செய்துகொண்டதால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

மே மாதம் 28ஆம் திகதி பிருந்தா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. வழக்கு குறித்து பேச மறுத்துவிட்ட மேத்யூ, நீதிமன்றம் என்ன கூறுகிறதோ அதற்கு கட்டுப்படுவதாக மட்டும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here