‘அஞ்சான்’ பட நடிகர் கொரோனாவால் மரணம்!

0

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகில் முதல் முறையாக இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா என்ற கொடிய வைரசுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தொடர்ச்சியாக பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இயக்குனர் தாமிரா மற்றும் இயக்குநர் கேவி ஆனந்த் ஆகியோர்கள் கொரோனாவுக்கு பலியானதால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’அஞ்சான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’அஞ்சான்’ படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்தவர் பிக்ரம்ஜித் கன்வர்பால் (Bikramjeet Kanwarpal)என்பவர்/ இவர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவருக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது,. பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் பலியானதை அடுத்து பாலிவுட் திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here