அஜித் கொடுத்தது கொரோனா நிவாரண நிதி எத்தனை லட்சம் தெரியுமா?

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கூடுதல் செலவினங்கள் இருப்பதால் பொதுமக்களும் தொழிலதிபர்களும் அதிகமான அளவில் நிதி தர வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை அடுத்து திரை உலக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் தாராளமாக நிதி வழங்கி வரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ஏற்கனவே சூர்யா-கார்த்தி குடும்பத்தினர் ரூபாய் ஒரு கோடி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முதல்வரின் நிவாரண நிதியாக அளித்தனர் என்பதை பார்த்து வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தல அஜித் அவர்கள் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூபாய் 25 லட்சம் முதல்வரின் நிவாரண நிதியாக வங்கி பரிவர்த்தனை கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த தகவலை அஜித் தரப்பு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அஜித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதிக்கு அளித்திருந்தார் என்பது, உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும், ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் ரூ.1 லட்சம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here