அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் – ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகள் என்ன?

0

கொரோனா வைரஸின் உருமாறிய வடிவங்கள் வேகமாக அடுத்த அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மேலும் ஒரு புதிய வைரஸின் பரவல் மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர்.

மதுரா, மெயின்புரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு அல்லது கொரோனா வைரஸின் வேரியண்டுகளாக இருக்கும் என மருத்துவர்கள் சந்தேகப்பட்ட நிலையில், அந்த வைரஸ் அல்ல என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தீவிர பரிசோதனை மேற்கொண்டதில் ’ஸ்க்ரப் வைரஸ்’ என்பது உறுதி செய்யப்பட்டது. மைட் போர்ட் ரிக்கெட்டிசியோசிஸ் (mite-borne rickettsiosis) என அழைக்கப்படும் ஸ்க்ரப் வைரஸால் மதுரா மாவட்டத்தில் மட்டும் 29 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்த வைரஸின் தாக்கம் காணப்படுகிறது.

ஸ்க்ரப் டைபஸ் என்றால் என்ன?

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), இது ‘ஓரியன்டியா சுட்சுகாமுஷி’ (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் எனக் கூறியுள்ளது. ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள ’லார்வா பூச்சிகள்’ கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்பட்டுள்ளது

ஸ்க்ரப் டைபஸின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், சில நேரங்களில் சொறி. நோயின் தாக்கம் தீவிரமான நிலையை எட்டியிருந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம் அல்லது கோமா, இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம்.

ஸ்க்ரப் டைபஸுக்கு ஏதேனும் தடுப்பூசி உள்ளதா?

வேகமாக பரவி வரும் ஸ்க்ரப் வைரஸ் பரவலுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

ஸ்க்ரப் டைபஸ் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது?

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதுபோல் ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான் மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் கிராமப் புற பகுதிகளில் இந்த வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரப் டைபஸுக்கு சிகிச்சை?

மத்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்க்ரப் டைபஸ் பாதிக்கப்பட்டவருக்கு டாக்ஸிசைக்ளின் (doxycycline) என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

ஸ்க்ரப் டைபஸைத் தடுக்கும் வழிகள்

தலை முதல் கால் வரை மூடி இருக்க வேண்டும். கொசுக்கள் மற்றும் லார்வா பூச்சிகள் இந்த நோயைப் பரப்புவதால், அவை கடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here