இந்தியா – அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது.
கடும் மழையினால் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது.
மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1.56 இலட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.