அங்கீகரிக்கும் தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் – கஜேந்திரகுமார்

0

தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வை தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடனான சந்திப்பின்போது, இனப் படுகொலைக்கான பொறுப்புகூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க வேண்டும் என எடுத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும் என்றும் நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் இதன்போது சுட்டிக்காட்டியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பூகோள் அரசியல் போட்டியின் பகடைகளாக இலங்கையின் வடகிழக்கு பகுதியை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை தாம் எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here