இந்தியா மத்திய அரசின் ‘அக்னிபாத்’ என்ற அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் 12 தொடருந்துகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 300 தொடருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 214 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை இந்திய மத்திய அரசு கடந்த 14 ஆம் திகதி அறிவித்தது.
அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயதெல்லை, குறைந்தபட்சம் 17 ஆகவும், அதிகபட்சம் 23 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வாகுபவர்களுக்கு, மத்திய துணை இராணுவ படை மற்றும் அசாம் துப்பாக்கிப் படைகளில் 10 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு எதிராக, தமிழகம், ஆந்திரா, பீகார், உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தப் போராட்டங்களின்போது, ஒருவர் மரணித்துள்ளார்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் 12 மாவட்டங்களில் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.