அக்கரைப்பற்று பாலமுனை வீதித் தடுப்பில் நேற்றிரவு மக்கள் குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 11 பொலிஸார் மற்றும் பொதுமக்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கறைப்பற்று பிரதான வீதியில் ஏற்பட்ட அமைதியின்னை சம்பவத்தில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
அமைதியின்மை காரணமாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன இதன்போது அக்கறைப்பற்று கல்முனை பிரதான வீதியில் பொலிஸாரின் சமைக்ஞையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு விபத்துக்குக்குள்ளாகியுள்ளது
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த சம்பவத்தை தொடர்ந்து விபத்து இடம்பெற்ற பகுதியில் 700க்கம் மேற்பட்டவர்கள் திடீரென ஒன்றுகூடியுள்ளனர்.
மேலும் இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் கடமைகளுக்கும் இடையூறு விளைவித்ததாக தெரியவந்துள்ளது.
அத்துடன் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்துவதாக குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ள அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது குறித்த தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்
இதனையடுத்து குறித்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இதன்போது காயமடைந்துள்ளதுடன் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய மேலதிக விசாரணைகள் முனனெடுக்கப்பட்டுள்ளன.